"என்னுடைய ஆதங்கத்துக்கு காலம் பதில் சொல்லும்..!" கருணாநிதி நினைவிடத்தில் கொந்தளித்த அழகிரிSponsored'தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் இருக்கிறார்கள்' என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி, ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அவருடைய உடல், சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று, மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு குடும்பத்துடன் சென்று அழகிரி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலிசெலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ''என் அப்பாவிடம் என்னுடைய ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன்.

Sponsored


Sponsored


என்ன ஆதங்கம் என்பது பின்னால் தெரியும். அதற்கு காலம் பதில் சொல்லும். என்னுடைய ஆதங்கம் என்பது கட்சி தொடர்பானது. தி.மு.க   -வின் செயற்குழு பற்றி எனக்குத் தெரியாது. நான் தற்போது தி.மு.க-வில் இல்லை. உண்மையான தி.மு.க விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள்' என்று தெரிவித்தார். அழகிரியின் இந்தக் கருத்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Trending Articles

Sponsored