`இது அவமானகரமானது..!’ - தமிழ்நாடு காவல்துறையைச் சாடும் கனிமொழிSponsored`தமிழ்நாடு காவல்துறையில், பெண் பணியாளர்களின் பாதுகாப்புக்கான விஷாகா கமிட்டி இல்லை' என்று தி.மு.க  எம்.பி., கனிமொழி  குற்றம் சாட்டியுள்ளார். 


 

அரசு  அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட பல்வேறு  குற்றங்களைத் தடுக்கவும், புகார்களை விசாரிக்கவும் மாநில, மாவட்ட அளவில் விஷாகா கமிட்டி அமைக்க வேண்டும்' என்று  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   அதை தமிழக அரசு கடைப்பிடிக்கவில்லை என்று தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கனிமொழி,  `தமிழ்நாடு காவல்துறையில்,  உழைக்கும் மகளிர் பாதுகாப்புக்கான விஷாகா கமிட்டி இல்லை என்ற தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.   உச்ச நீதிமன்றம், 'பணி இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக விஷாகா கமிட்டி அமைக்க வேண்டும்' என்று 1997-ல் தீர்ப்பு வழங்கியது. மத்திய அரசு, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை 2013-ம் ஆண்டு செயல்படுத்தியது.  அரசு அலுவலகங்களிலும், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் இருக்கத்தான் செய்கின்றன. காவல்துறையிலேயே பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விஷாகா கமிட்டி இல்லை என்பது, அவமானகரமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.  

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored