என்னை தி.மு.க.வில் சேர்க்காததற்கு காரணம் இதுதான்! புதிர்போடும் அழகிரிதி.மு.க தலைவர் கருணாநிதி மறைந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தி.மு.க-வில் புயல் வீசத் தொடங்கிவிட்டது. 

Sponsored


இன்று காலை மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு குடும்பத்துடன் சென்று அழகிரி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலிசெலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ``நான் தற்போது தி.மு.க-வில் இல்லை. கலைஞர் கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள். என்ன ஆதங்கம் என்பது பின்னால் தெரியும். அதற்குக் காலம் பதில் சொல்லும். என்னுடைய ஆதங்கம் என்பது கட்சி தொடர்பானது. என் அப்பாவிடம் என்னுடைய ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன்.’ என்று பேசினார். இது தி.மு.க தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், ஆங்கில ஊடகத்துக்கு அழகிரி பேட்டியளித்துள்ளார். அப்போது, `நீங்கள் மீண்டும் தி.மு.க-வில் இணைந்து செயல்பட விரும்புகிறீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அழகிரி  `நான்  தி.மு.க-வுக்குள் வருவதில் மு.க.ஸ்டாலினுக்கு விருப்பமில்லை. இது தொடர்பாக நான் யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நான் தி.மு.க-வுக்குள் வந்தால் வலிமையான தலைவர் ஆகிவிடுவேன் என்று அச்சப்படுகிறார்கள். தி.மு.க-வில் கட்சிப்பொறுப்புகள் விற்கப்படுகின்றன. கட்சியின் நிர்வாகிகள் பலர் ரஜினிகாந்த்துடன் தொடர்பில் உள்ளனர். தற்போதுள்ள கட்சியின் தலைமை தி.மு.க-வை சீரழித்துவிடும். கலைஞர் கருணாநிதியின் ஆன்மா அவர்களை சும்மாவிடாது. கண்டிப்பாகத் தண்டிக்கும்’ என்று காட்டமாக கூறியுள்ளார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored