Sponsored
''எங்க ஊர்ல 40 வருடமாகப் பண்டிகையின்போது சாமி தேரில் திருவீதி உலா சென்று வருவது வழக்கம். வழக்கமாகச் செல்லும் பாதையில் சென்று வந்துவிடும். ஆனால், எங்க ஊரில் உள்ள விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்கள் எங்க ஊர் பக்கமும் தேர் வர வேண்டும் என்று தகராறு செய்கிறார்கள். அவர்களுக்கு வருவாய்த் துறையும் காவல்துறையும் துணைபோகிறார்கள். தற்போது தெருக்கூத்துகூட விட முடியாமல் இருக்கிறோம்'' என்று ஊர்மக்களோடு தெருக்கூத்து கலைஞர்களும் தங்கள் வேஷங்களைக் கலைக்காமல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்கள்.
இதுபற்றி ஊர் பெரியவர் ராமலிங்கம், ''நாங்க சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் செந்தாரப்பட்டியிலிருந்து வருகிறோம். எங்க ஊரில் மாரியம்மன் கோயில், முருகன் கோயில், பெரியாண்டிச்சி அம்மன் கோயில், தருமர் கோயில் என 8 கோயில்கள் உள்ளன. அந்தக் கோயில்கள் அனைத்து சமுதாயத்தினருக்கும் சொந்தமானது. இந்தக் கோயில்களில் சாதி பாகுபாடுகள் பார்ப்பதில்லை. அனைத்து சமுதாயத்தினரும் வந்து பொங்கல் வைக்கலாம். பூஜை கொடுக்கலாம். ஆனால், 40 ஆண்டுகளாக சாமி திருவீதி உலா செல்லும் தேர் வழக்கமான வழியில் செல்லும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் அவங்க ஊர்ப் பகுதிக்கு தேர் வர வேண்டும் எனக் காவல்துறை, வருவாய்த்துறையில் புகார் கொடுத்தார்கள். நாங்கள் ஆத்தூர் தாலுகா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். வழக்கம் போல தேர் சென்று வரும் வழியில் சாமி திரு வீதி உலா நடத்தலாம் என்று தீர்ப்பு வந்துவிட்டது. ஆனாலும், வருவாய்த்துறையும் காவல்துறையும் சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காட்டி தேர் நடத்த விடாமல் செய்கிறார்கள். தெருக்கூத்துகூட விட அனுமதிக்க மாட்டங்கறாங்க'' என்றார்.
Sponsored
இதுபற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செந்தாரப்பட்டி நகரச் செயலாளர் ரமேஷ், ''அவர்கள் சொல்லும் அனைத்துக் கோயில்களும் எங்களுக்கும் சொந்தம். அந்தக் கோயில்களுக்குச் சொந்தமான சுமார் 400 ஏக்கர் நிலத்தை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே வைத்திருக்கிறார்கள். அவுங்க ஊர் பக்கம் தேர் செல்கிறது. எங்க ஊர் பக்கம் தேர் வருவதில்லை. காலங்கள் மாறியும் இன்னும் சாதி வெறி மாறவில்லை. தெருக்கூத்து கலைஞர்களை வைத்து தேர் இழுத்து எங்க உரிமையைப் பறிக்கப்பார்க்கிறார்கள். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. கூத்து என்ற பெயரில் தேர் இழுக்கவே முயல்கிறார்கள். தேர் இழுத்தால் எங்க ஊரு பக்கமும் வர வேண்டும். இல்லையென்றால் நிச்சயம் சாதி மோதல் உருவாக வாய்ப்பு இருக்கிறது'' என்றார்.
Sponsored
Trending Articles
இஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்?- டி.ராஜேந்தர் விளக்கம்
`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை!' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்
`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்!'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை
சென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்? - பிரேமலதா விளக்கம்
Sponsored