`கோரிக்கை ஆபத்தானது!’ - சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது குறித்த வழக்கில் நீதிபதிகள் கருத்து



சமூக வலைதளங்கள் மூலம் தனிநபர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பான புகார்களைக் கையாள்வது  குறித்து ஆகஸ்ட்  20-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சைபர் குற்றப்பிரிவு டி எஸ் பி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Sponsored



சமூக வலைதளங்கள் மூலமாகத் தனிநபருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், சைபர் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் ஃபேஸ்புக், ட்விட்டர், ஜி மெயில் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களையும் ஆதாருடன் இணைப்பதைக் கட்டாயமாக்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளமெண்ட் ரூபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அவதூறான பதிவுகளைப் பதிவு செய்பவர்கள் குறித்த விவரங்களை வழங்கும்படி கேட்டால் சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்கள், வழங்க மறுப்பதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

Sponsored


இதையடுத்து, மனுவில் கூறியுள்ள கோரிக்கை மிகவும் ஆபத்தானது எனவும், தனிநபரரின் அந்தரங்க உரிமைக்கு எதிரானது என்றும் இந்தக் கோரிக்கையை எழுப்ப மனுதாரருக்கு என்ன உரிமை உள்ளது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அவதூறு தொடர்பாகக் காவல் துறையில் புகார் அளித்தாலே தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகச் சமூக வலைதளத்தில் பதிவிட்டவரும் தண்டிக்கப்பட்டுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஆகஸ்ட் 20-க்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், சமூக வலைதளங்கள் மூலம் தனிநபர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பான புகார்களைக் கையாள்வது குறித்து ஆகஸ்ட்  20-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சைபர் குற்றப்பிரிவு டி.எஸ்.பி-க்கும் உத்தரவிட்டனர்.
 

Sponsored




Trending Articles

Sponsored