`காவிரியில் வெள்ளம்போனாலும் எங்க ஊர் குளமெல்லாம் கிரிக்கெட் மைதானமாத்தான் இருக்கு!’ - வேதனையில் மயிலாடுதுறை மக்கள்Sponsoredகாவிரி ஆற்றின் கடைமடைப் பகுதிகளான மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள குளம், குட்டைகளுக்கு இன்று வரை நீர் வரவில்லை. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால், இங்குள்ள வறண்ட குளங்கள் சிறுவர்கள் கிரிகெட் விளையாடும் மைதானங்களாக உள்ளதே என்று பொதுமக்கள் வேதனைப்படுகிறார்கள்.  

இந்த ஆண்டு மேட்டூர் அணை இரண்டாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. கடந்த மாதம் ஜுலை 19-ம் தேதி டெல்டா சாகுபடிக்காகக் காவிரியிலும் அதன் கிளை ஆறுகளிலும் முழுமையாகத் தண்ணீர் விடப்படவில்லை. அப்போதே இப்பகுதி ஆறுகளிலும் பாசன வாய்க்கால்களிலும் ஆங்காங்கே ஆளும் கட்சியினர் கட்டுமான பணிகளைச் செய்து வந்தனர். இந்தப் பணிகளுக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஆறுகளில் போதுமான தண்ணீர் திறந்துவிடவில்லை. இப்பகுதியில் சுமார் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யும் விவசாயிகள் காவிரி நீரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  

Sponsored


தற்போதும் காவிரியில் 30,000 கன அடி நீரும், கொள்ளிடத்திலிருந்து சுமார் 64,000 கனஅடி நீரும் திறந்துவிட்டுள்ளனர். என்றாலும், கடைமடைப் பகுதிகள் காய்ந்து கிடக்கிறதே ஏன் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டோம், `தஞ்சையிலிருந்து கடைமடைப்பகுதி வரை காவிரியின் கரைகள் பலப்படுத்தப்படவில்லை. அதிகளவு தண்ணீர் திறந்துவிட்டால் பல இடங்களில் கரைகள் உடைந்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்து பிரச்னை உருவாகும். கரைகளை மேம்படுத்த முயன்றால் அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நேரிடும். அதனால் அரசுக்குக் கெட்டப்பெயர் வருவதுடன், எங்களுக்கு வேலைப்பளுவும் கூடும். அதனால்தான் குறைந்தளவு தண்ணீர் திறந்துவிடுகிறோம்’ என்று கூலாகச் சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது.  

Sponsored


`மயிலாடுதுறை நகரில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இதில் பசுமைத் தீர்ப்பாயம் தந்த உத்தரவின்படி பொதுமக்களே தூர்வாரியதால் சில குளங்களில் மட்டும் நீர் நிறைந்துள்ளது. செம்மங்குளம், செட்டிகுளம், தேரடிகுளம் போன்ற எண்ணற்ற குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இக்குளங்களுக்குத் தண்ணீர் கொண்டுவரும் பாசன வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளுடன், புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. இதைச் சீரமைக்க அதிகாரிகள் யாரும் கவனம் செலுத்தவில்லை. அதனால்தான் இன்று வரை பல குளங்கள் விளையாடும் மைதானங்களாகிவிட்டன. இந்த நகரில் 200 அடி ஆழத்துக்கு கீழ்தான் நிலத்தடி நீர் உள்ளது. பல வீடுகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. இங்குள்ள குளங்கள் அனைத்தும் நிறைந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும், குடிநீர்ப் பிரச்னை ஓரளவு தீரும். ஆடி அமாவாசைக்குகூட காவிரியில் நீராடுவதற்காகத் தண்ணீர் விடவில்லையே’’ என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? Trending Articles

Sponsored