`கருணாநிதிக்கு அஞ்சலி!’ - திண்டுக்கல்லில் கட்சிப் பேதமின்றி ஒன்றிணைந்த மக்கள்Sponsoredமறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திண்டுக்கல்லில் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆயிரக்கணக்கானோர் மெளன ஊர்வலம் சென்றனர்.

அனைத்துக் கட்சிகள், வணிகர்கள், பொதுமக்கள் சார்பாக மௌன ஊர்வலம் மூலமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள், வணிகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட மாபெரும் மௌன ஊர்வலம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மௌன அஞ்சலி பேரணியில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, தே.மு.தி.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த மாவட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Sponsored


அரசியல் கட்சிகளைத் தவிர்த்து வணிகர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மௌன ஊர்வலத்தில் கலந்துகொண்டு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட மௌன ஊர்வலம், ஏ.எம்.சி ரோடு, மெங்கில்ஸ் ரோடு, ஆர்.எஸ்.ரோடு, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக மணிக்கூண்டை அடைந்தது. சுமார் 8 கிலோமீட்டர் தூரம் பயணித்த மௌன ஊர்வலம் மணிக்கூண்டில் நிறைவடைந்தது. இந்த மௌன ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

Sponsored
Trending Articles

Sponsored