`திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தினகரனின் 20 ரூபாய் நோட்டு செல்லாமல் போகும்!' - கடுகடுத்த உதயகுமார்



Sponsored



திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், ஜெயலலிதா பேரவை சார்பாகச் சைக்கிள் பயிற்சி முகாம் விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று மாலை, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், சிலபேர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம் கிடைக்கிறது என்று கூறியவர், அதற்கு விளக்கமும் அளித்தார். 

அதில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் மணிமண்டபம் கட்டுவதற்கு அ.தி.மு.க அரசு ஏற்பாடு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க-வினர் உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகளைத் தொடர்ந்தார்கள். 'ஏன் இப்படி வழக்கு போடுகிறீர்கள் என்று நாங்கள் கேட்டோம்.' அதற்கு தி.மு.க-வினர், `எங்களுக்கும் வழக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மணிமண்டபம் கட்டுவது உங்கள் விருப்பம் நாங்கள் எந்தவொரு வழக்கும் போடவில்லை' என்று சொன்னார்கள். அந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, கருணாநிதி இறந்துபோனார். மெரினாவில் உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதி கேட்டு, அண்ணன் எடப்பாடியாரை இரவோடு இரவாகச் சந்தித்தார் ஸ்டாலின். ஆனால், முதல்வரோ, `மெரினாவில் இடம் கொடுக்க முடியாது' என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். அதற்கு `ஸ்டாலின் நாங்கள் நீதிமன்றம் செல்வோம்' என்று சொன்னார். அதற்கு முதல்வர் எடப்பாடியாரோ மெரினா கடற்கரையில் எதுவொன்றும் செய்யக் கூடாது என்று வழக்கு உள்ளது என்றார்.  

Sponsored


உடனே மறுநாள் காலையில் பார்த்தால் அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. இதிலிருந்தே தெரியவில்லையா யார் வழக்கு போட்டார்கள் என்று. வழக்கு போட்டவர்கள் எல்லோருமே தி.மு.க-வினர்தான். அதனால்தான் சொன்னேன் சிலர் இறந்தால்தான் நாட்டுக்கு விமோசனம் கிடைக்கிறது" என்று கூறினார். மேலும் பேசிய அவர், அனைத்து வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதால் அம்மா அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட, கூடிய விரைவில் அரசு ஏற்பாடு செய்யும். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் செல்லாது. டி.டி.வி.தினகரன் படுதோல்வி அடைவார்" என்று கூறினார். 

Sponsored




Trending Articles

Sponsored