`அதிகாரிகள் பணியில் அதிருப்தி’ - ஆறுகளில் விடிய விடிய ஆய்வு செய்த தஞ்சை கலெக்டர்Sponsoredமேட்டூரில் தண்ணீர் அதிகமாக திறக்கப்படுவதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பிற்காக அனைத்து ஏற்பாடுகளுடன் தயாராக இருக்க வேண்டும் என அரசு தரப்பில் கூறபட்டிருந்தது. தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாதுரை பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், கடைமடை வரை தண்ணீர் செல்வதற்காக பணிகள் குறித்து உத்தரவிட்டிருந்தார். ஆனால், அவர்கள் அந்தப் பணியை ஒழுங்காகச் செய்யாததால், கலெக்டரே நேரடியாகக் கல்லணை கால்வாய் மற்றும் காவிரி ஆறுகளில் விடிய விடிய டார்ச் லைட் கொண்டு ஆய்வில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லணையிலிருந்து தண்ணீ திறந்த சில நாள்களில், தஞ்சாவூரில் கல்லணை கால்வாய் ஆற்றில் கல்விராயன் பேட்டை என்ற இடத்தில் இருபது அடி அளவிற்கு  உடைப்பு ஏற்பட்டது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் மெத்தனமே இதற்குக் காரணம் என விவசாயிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். மேலும்,`பல ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. ஆனால் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. இதற்கு காரணம் மாவட்ட நிர்வாகம் மற்றும்  பொதுப்பணித் துறை அதிகாரிகளே’ என குற்றம்சாட்டி ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

Sponsored


`விவசாயிகளின் குறைகளைக் கேட்பதற்குப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்காமல் எதாவது காரணத்தைச் சொல்லிவிட்டு வெளியே சென்று விடுகின்றனர்’ என்ற குற்றசாட்டுக்களும் எழுந்தது. மேலும், தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை தண்ணீர்வரத்து அதிகமாக உள்ளது மக்களின் பாதுகாப்பு குறித்தும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு பல உத்தரவிட்டும் அந்த பணிகளையும் ஒழுங்காக செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த கலெக்டர் அண்ணாதுரை, கல்லணைக் கல்வாய் மற்றும் காவிரி ஆறுகளில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்யபட்டிருக்கின்றன என விடிய விடிய டார்ச் லைட் அடித்து கொண்டு ஆய்வு செய்தார். அவரோடு ஒரு சிலர் மட்டும் சென்றனர். இதனால், தஞ்சை மாவட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Sponsored
Trending Articles

Sponsored