சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!Sponsoredசுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 15ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


72வது சுதந்திர தினம் புதன்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதால் கொத்தளத்தை சுற்றிலும் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சென்னை முழுவதும் 15ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் ஏழடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் மத்திய ரிசர்வ் படை,மத்திய தொழில் பாதுகாப்புப்படை போலீஸார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் விடுதிகளில் சந்தேகிக்கும் வகையில் நபர்கள் யாரும் தங்கியுள்ளனரா? என்று காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

Sponsored


Sponsored


அதே போல பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சென்னை முழுவதும் காவல்துறை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.Trending Articles

Sponsored