`அமைச்சர் கூறுவது முற்றிலும் பொய்' - கொந்தளிக்கும் விவசாயிகள்!Sponsoredகரூர் மாவட்டத்தின் கடைமடை வரை காவிரி நீர் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுவது பொய் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் கதவணை பகுதியை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், "காவிரியாற்றிலிருந்து மாயனூர் கதவணைக்கு வரும் உபரி நீரின் அளவு 98,000 கன அடியாகவும், வெளியேற்றப்படும் நீரின் அளவு 98,000 கன அடியாகவும் உள்ளது. கதவணையின் மொத்த கொள்ளளவு 1004 கன அடியாகவும் (1.04 டி.எம்.சி), தற்போதுள்ள நீரின் இருப்பு 660 கன அடியாகவும் (0.66 டி.எம்.சி) உள்ளது. அணையின் நீளம் 1,230 மீட்டர் ஆகும். வினாடிக்கு 4.63 இலட்சம் கன அடி நீரை வெளியேற்றும் அளவிற்கு 98 சதவிகித நீர் வெளியேறும் 'ஷட்டர்களுடன்' இந்த கதவணை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அணையிலிருந்து கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால் ஆகிய வாயக்கால்கள் மூலம் 1,610 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் 28,752 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், கதவணையில் நீர் தேக்கப்படுவதால் சுமார் 8 கி.மீ நீளத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் 20 கி.மீ சுற்றளவிற்கு நிலத்தடி நீர் செறிவூட்டம் அடைகிறது. கரூர் மாவட்டத்தில் காவிரி ஆறு அகலமாக உள்ளதால், நீரின் வரவு அதிகரிக்கும் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் நீரை வெளியேற்ற முடிகிறது. மொத்தத்தில் கரூர் மாவட்டத்தின் கடைமடை வரை காவிரி நீர் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார். 

Sponsored


Sponsored


ஆனால், இது தொடர்பாக நம்மிடம் பேசிய விவசாயிகள், "அமைச்சர் சொல்றது சுத்தப் பொய். குடிமராமத்து பணியில் அமைச்சர் சொன்ன வாய்க்கால்களை கடமைக்கு தூர் வாருனாங்க. ஆழமாக, அகலமாக தூர் வாராமல், சும்மா மேலோட்டமாகதான் தூர் வாரினாங்க. இந்த வேலையில் பல முறைகேடுகள் நடந்திருக்கு. அதோடு,காவிரி நீர் இந்த கிளை வாய்க்கால்களில் பாய முடியாத அளவிற்கு மணலை ஆழமாக அள்ளி, இந்த வாய்க்கால்களை மேடாக்கிட்டாங்க. இதனால், தண்ணீர் ஏறி பாயல.

கரூர் மாவட்ட காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடினாலும், கரூர் மாவட்டத்தின் தென்பகுதிகளான கடவூர், அரவக்குறிச்சி, தோகைமலை, ஈசநத்தம், தரகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் வறட்சி தாண்டவமாடுது. ஆனால், அமைச்சர் 'கடைமடை வரை தண்ணீர் போக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'ன்னு கூசாம பொய் சொல்றார். இது என்ன நியாயம்?" என கேள்வி எழுப்புகிறார்கள்.
 Trending Articles

Sponsored