300 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்ற நாத உற்சவ நிகழ்ச்சி!Sponsored       
கரூர் மாவட்டத்தில் ஒரு கோயிலில் ஒரே நேரத்தில் 300 நாதஸ்வர இசை கலைஞர்கள் பங்கேற்று வாசித்த நாத உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.   

 

கரூர் மாவட்டம்,மண்மங்கலம் வட்டம் நெரூர் பகுதியில் புகழ்பெற்ற அக்னிஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்கு வழிபாடு நடத்த வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். நேற்று நடைப்பெற்ற 9ம் வருட நாத உற்சவ நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். நாத உற்சவ நிகழ்ச்சியில் சுமார் 300 நாதஸ்வர இசை கலைஞர்கள் வாசித்தது பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது. தமிழகம் முழுவதும் உள்ள தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் இசை உற்சவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாசித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த அக்னீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தால் அரசியல்,தொழில் உள்ளிட்ட துறைகளில் பெரிய அளவில் வரலாம் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது.
 

Sponsored


இதுபற்றி,பேசிய பக்தர்கள் சிலர், "இந்த அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக உள்ளார். இவரை வேண்டிக்கொண்டால் பெரிய அளவில் அரசியலில் வளரலாம் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர்  ஓ.பி.எஸ்,மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்,முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை செயலாளர் ஜெ.தீபா உள்ளிட்ட பலரும் இந்த கோயிலுக்கு வந்திருக்காங்க. அதுவும் இந்த அக்னீஸ்வரருக்கு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இந்த 300 நாதஸ்வர கலைஞர்கள் பங்குபெற்று வாசிக்கும் பிரமாண்ட நாத உற்சவ நிகழ்ச்சியின்போது கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சிவன் வேண்டியதை அருள்வார். ஏனென்றால்,ஒரே நேரத்தில் 300 நாதஸ்வர கலைஞர்கள் நாதஸ்வரத்தை வாசிப்பதால்,அதை கேட்டு அக்னீஸ்வரர் மனம் உருகிய நிலையில் இருப்பார். அதனால்,பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் அன்று நிறைவேற்றுவார். அதனால்,பக்தர்கள் திரளாக வந்து இந்த நாத உற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தெரிவித்தனர்.

Sponsored
Trending Articles

Sponsored