72-வது சுதந்திர தினம் - சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு பதக்கங்கள் அறிவிப்புSponsoredநாளை நடைபெற உள்ள சுதந்திர தினத்தையொட்டி புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடுமுழுவதும் நாளை 72-வது சுதந்திரதினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அனைத்து மாநிலத்திலும் சிறப்பு விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதால் கொத்தளத்தைச் சுற்றிலும் ஐந்தடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Sponsored


இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள சுதந்திரதின விழாவையொட்டி, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் தங்களின் பணியில் மிகுந்த ஈடுபாடு, அர்ப்பணிப்போடு செயல்பட்ட காவலர்களைப் பாராட்டும் வகையில் ‘முதல்வரின் காவல் புலன் விசாரணை சிறப்புப் பதக்கங்கள்’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. பதக்கம் பெறுபவர்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், பொதுச் சேவையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு ‘சிறந்த பொதுச்சேவைக்கான முதல்வர் காவல் பதக்கம்’ பெறுபவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Sponsored


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி:Trending Articles

Sponsored