`வரலாறு தெரிந்துகொண்டு பேசுங்கள்'- ரஜினியை விமர்சிக்கும் கடம்பூர் ராஜு



Sponsored



``நடிகர் ரஜினிகாந்துக்கு வரலாறு தெரியாது. அவர் வரலாறு  தெரிந்துகொண்டு பேசினால் நன்றாக இருக்கும்" என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். 

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்  கடம்பூர் ராஜு, ``அ.தி.மு.க. தனிக்கட்சியாக கடந்த 1972-ல் தொடங்குவதற்கு முழுக் காரணமே மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிதான். எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் இருந்தபோது கருணாநிதி அவரை உதாசினப்படுத்தியதால்தான் அ.தி.மு.க. என்ற மாபெரும்  இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. அ.தி.மு.க. உதயமான நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் இல்லை. எனவே, அவருக்கு அ.தி.மு.க.வின் வரலாறு தெரிய வாய்ப்பே இல்லை. அவர் வரலாற்றை தெரிந்து பேசினால் நன்றாக இருக்கும்.

முதல்வராகப் பணியில் இருந்து மறைந்தவர்கள் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய 3 பேர் மட்டும்தான். முதல்வராக இருந்து மறைந்தால் அவருக்கு மரபுப்படி, அரசு விதிகளின்படி அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படும். இதுதான் வழக்கம்.
ஆனாலும், 19 ஆண்டு காலம் முதல்வராக இருந்துள்ளார். 50 ஆண்டுகால தி.மு.க தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் என்ற நிலையில்தான் கருணாநிதி மரணமடைந்தார். இருப்பினும், அரசியல் நாகரிகத்தோடு அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய முதல்வர் எடப்பாடியார் நடவடிக்கை எடுத்தார். அரசு நினைத்ததால்தான், கருணாநிதியின் உடலுக்கு மரியாதை செய்ய தமிழக செய்தித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள  ராஜாஜி ஹால் தரப்பட்டது. அத்துடன் வேண்டிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டன. ஒரு நாள் பொது விடுமுறை அளிக்கப்பட்டதுடன், 7 நாள்கள் அரசு நிகழ்ச்சிகள் ரத்து என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது.

Sponsored


தி.மு.க. மரபையும், பண்பாட்டையும் மதிக்கிறது என்றால், செயற்குழு கூட்டத்தில் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்திருக்க வேண்டும். மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய சட்டப்படி இடம் கொடுக்க முடியாது என்றவுடன் தி.மு.க-வின் தூண்டுதலால் போடப்பட்ட 5 வழக்குகளும் வாபஸ் பெறப்படுகிறது. இதெல்லாம் ரஜினிக்குத் தெரியாது. தெரியாத கருத்தை ரஜினி சொல்ல வேண்டாம். இடைத்தேர்தலில் மீண்டும் நாங்கள்தான் அ.தி.மு.க. என நிரூபிப்போம் என தினகரன் கூறியிருப்பது மறைமுகமாக அ.தி.மு.க. வெற்றி பெறும் என்பதையே உணர்த்துகிறது. கொடியும் இரட்டை இலைச் சின்னமும் எங்கு இருக்கிறதோ அதுதான் அ.தி.மு.க. அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். எனவேதான் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. எங்களது உட்கட்சி பிரச்னை குறித்து மற்றவர்கள் பேச வேண்டாம்" என்றார்.

Sponsored




Trending Articles

Sponsored