என்ன முறைகேடு செய்தார் விக்கிரமராஜா? - ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுSponsoredகொட்டிவாக்கத்தில் செயல்படும் பள்ளிகளில் 13 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மற்றும் சிலர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கொட்டிவாக்கத்தில் நெல்லை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமச்சந்திரா பப்ளிக் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் 13 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர்  விக்கிரமராஜா மற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் தலைவர் பத்மநாபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்தி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

Sponsored


பத்மநாபன் கொடுத்த புகாரில், ``எங்கள் சங்கத்தின் விதிகளின்படி நான்கு செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஒரு செயலாளர் பள்ளியில் தாளாளராக இருந்து பள்ளியின் செயல்பாடுகளுக்கு பொறுப்பாளராக சங்கத்தின் நிர்வாகக் குழுவால் தேர்வு செய்யப்படுவார். கொட்டிவாக்கத்தில் உள்ள பள்ளிகளின் அனைத்து வரவு- செலவு கணக்குகளையும் சங்க விதிகளுக்கு உட்பட்டு அவர் செயல்பட வேண்டும் என சங்க விதிகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எங்களது பள்ளிகளின் வங்கிக் கணக்குகளை சங்கத்தின் தலைவர், பள்ளிக்கு பொறுப்பாக செயல்படும் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய மூன்று பேரின் கையெழுத்துப்படியே செயல்படுத்த முடியும். இந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு முதல் எங்கள் சங்கத்துக்கு நான்கு செயலாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்ட விக்கிரமராஜா பள்ளி தாளாளராக இருந்துவந்தார். அவர், சிலருடன் கூட்டுச் சேர்ந்து பல முறைகேடுகளைச் செய்துள்ளார். அதுதொடர்பாக வந்த புகாரின்பேரில் ஆய்வு செய்தோம். அப்போது முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. பள்ளியின் அங்கீகாரம் பெறும் வகையில் 13 கோடி ரூபாய் வரை 2015-16-ம் கல்வியாண்டில் கையாடல் செய்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும், எங்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்த குமார், பள்ளி கட்டடம் கட்டும் பணியில் மணல் சப்ளையராக இருந்துள்ளார். அவர் மணல் சப்ளை செய்ததற்காக குறிப்பிட்ட தொகையைப் பெற்றுள்ளார். அதிலும் முறைகேடு நடந்துள்ளது. பள்ளிக்கான உபகரணங்களைக் கொள்முதல் செய்ததிலும் முறைகேடு நடந்துள்ளது. போலி ரசீதுகள் மூலம்தான் முறைகேடு நடந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

Sponsored


இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``விக்கிரமராஜா மற்றும் அழகுக்கரசி, குமார், ஆத்தி அரசன், பள்ளியின் முன்னாள் தலைமை கணக்காளர் முரளிதரன், பள்ளியின் பில்டிங் மேஸ்திரி ஜோகிங்ஸ்டன்,  ரோஜா பைனான்ஸின் மேலாளர் ஹரிராமன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் விக்கிரமராஜா மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளோம். இனிமேல்தான் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். Trending Articles

Sponsored