`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை! - கோவை சர்ச்சைSponsoredகோவை, கருமத்தம்பட்டியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில், டாஸ்மாக் கடை  இயங்கி வருகிறது.

டாஸ்மாக் இல்லாத டவுன் என்ற பெயரைப் பெற்றிருந்த, கோவை கருமத்தம்பட்டி பேரூராட்சியில், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, கடந்த வாரம் 3 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போலீஸார் ஒருபக்கம் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மறுபக்கம் மர்ம நபர்கள் சிலர் போராட்டம் நடத்திய பெண்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சோமனூரில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

Sponsored


இதுதொடர்பாக அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன்,`அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் நிதி வாங்கித்தான் அந்த வீட்டை கட்டியுள்ளனர். அந்த வீட்டை 5 ஆண்டுகளுக்கு வாடகைக்கு விடுவது சட்டப்படி குற்றம். ஆனால், இங்கு அரசின் டாஸ்மாக்கே இயங்கி வருகிறது. அதிகாரிகள் எப்படி இதற்கு கையெழுத்துப் போட்டுள்ளனர் என்று தெரியவில்லை. அவர்களும் இதற்கு உடந்தையாக இருந்தார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. இதுதொடர்பாக, கருமத்தம்பட்டி செயல் அலுவலரிடமும் மனு அளித்துள்ளோம்'' என்றார்.

Sponsored


இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டாஸ்மாக் துணை மேலாளர், கருமத்தம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோரைத் தொடர்புகொண்டபோது, எங்களுக்குத் தெரியவில்லை. விசாரிக்கிறோம் என்றனர் சொல்லி வைத்தது போல.Trending Articles

Sponsored