குமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு! - துண்டிக்கப்பட்ட மலைக்கிராமங்கள்கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் பெருஞ்சாணி அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்தது, மலைக்கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

Sponsored


கன்னியாகுமரி மாவட்டம் மலையோரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குமரி மாவட்ட அணைகள் நிரம்பி வருகின்றன. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 76.20 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. 12,000 கன அடி தண்ணீர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 6,500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பெருஞ்சாணி போன்ற பகுதிகளில் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்தது. வாழை மற்றும் ரப்பர் தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்தது. பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். காளிகேசம், கீரிப்பாறை பகுதிகளில் தொழிலாளர் குடியிருப்புக்குச் செல்லும் பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடிவருகின்றனர்.

Sponsored


Sponsored


மலைக்கிராமமான குற்றியாறு - மோதிரமலையை இணைக்கும் சாலையின் குறுக்கே கோதையாற்றில் உள்ள தண்ணீர் பாய்வதால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் இன்னும் இரண்டு நாள்கள் மழை பெய்ய வாய்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளதால் மலைக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். Trending Articles

Sponsored