உள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!Sponsoredஉயர் நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத தமிழக அரசு மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகத் தி.மு.க தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநில ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளரும் செப்டம்பர் 11-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017 நவம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தி.மு.க தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அரசியல் சாசனப்படி 5 ஆண்டுகள் பதவி காலம் முடியும் முன்பே தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தேர்தலை நடத்தாமல் இருப்பதற்காக செயற்கையாகத் தடைகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

Sponsored


Sponsored


இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாகவே சிறைக்கு அனுப்பலாம் என வலியுறுத்திய தி.மு.க தரப்பு வழக்கறிஞர், தேர்தல் நடத்தாமல் இருப்பதற்காகத் தமிழக அரசும் மாநிலத் தேர்தல் ஆணையமும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகவும் புகார் தெரிவித்தார். வார்டு மறுவரையறை என்பது ஒரு காரணமே அல்ல எனக் குறிப்பிட்ட அவர், உள்ளாட்சித் தேர்தல் ரத்து எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு பிறப்பிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு அவசர அவசரமாக வார்டு மறுவரையறை செய்வதற்கான ஆணையத்தை அமைத்து அரசு அவசரச் சட்டம் இயற்றியதாகக் குற்றம்சாட்டினார். அரசுத் தரப்பில் எந்தப் பதிலும் தாக்கல் செய்யப்படாததால், இந்த மனு தொடர்பாகத் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் ஹர்மந்தர் சிங்,  ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோர் செப்டம்பர் 11-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்குத் தள்ளிவைத்தனர்.Trending Articles

Sponsored