`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்!’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடிSponsoredகும்பகோணத்தில் மூவேந்தர் முன்னேற்றக் கழக ஒன்றியச் செயலாளர் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி கபிரியேல் உட்பட 13 பேர் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதனால் நீதிமன்ற வளாகமே பரபரப்புடன் காணப்பட்டது.

கும்பகோணம் அருகே தாராசுரத்தைச் சேர்ந்தவர் லெட்சுமணன். மூவேந்தர் முன்னேற்றக் கழக ஒன்றியச் செயலாளராக இருந்த இவரை கடந்த 2012-ம் ஆண்டு 12 பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்தது. இது தொடர்பாக கும்பகோணம் தாலுகா போலீஸார் வழக்கு பதிந்து கமலக்கண்ணன், ஜீவா, ஆனந்த், மூர்த்தி உட்பட 12 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மயிலாடுதுறையைச் சேர்ந்த பிரபல ரவுடியான கபிரியேல் புழல் சிறையில் இருந்தபடியே செல்போன் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து கொலைக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Sponsored


இதையடுத்து, லெட்சுமணன் கொலை வழக்கில் கபிரியேலைச் சேர்த்து போலீஸார் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக கபிரியேல், சென்னை புழல் சிறையிலிருந்து துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்போடு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். கபிரியேலோடு சேர்த்து குற்றம் சாட்டப்பட்ட 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர் இந்த வழக்கை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.இதனால் நீதிமன்ற வளாகமே பரபரப்புடன் காணப்பட்டது.

Sponsored
Trending Articles

Sponsored