`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யாதீர்கள்!’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கைSponsored”துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு  வழக்குகளை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம் செய்து  உத்தவிரவிட்டுள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி கடந்த மே-22ம் தேதி  ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்றனர். இப்போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் நடந்த  துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச் சம்பவம் குறித்த 5 வழக்குகளை  சி.பி.சி.ஐ.டி.,  போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு  உத்தரவிட்டது.  இதனை எதிர்த்தும்,  துப்பாக்கிச் சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறி துாத்துக்குடி மாவட்ட சி.பி.எம். கட்சியின் மாவட்டச் செயலர் அர்ச்சுணன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

Sponsored


இந்த வழக்கை நீதிபதிகள் சி.டி. செல்வம் மற்றும் பஷீர்அகமது ஆகியோர் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்தநிலையில், துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து  வழக்குகளையும் சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது குறித்து வழக்குத் தொடர்ந்த சி.பி.எம்., கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அர்ச்சுணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “துாத்துக்குடியில் நடந்த மக்கள் விரோத துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமான போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் மீது இதுவரையில் எந்த வழக்கும் பதியப்படவில்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ. இயக்குநரகத்துக்கும், தமிழக அரசுக்கும் சி.பி.எம். கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதற்கு எந்த பதிலும் இல்லாத நிலையில், கட்சி சார்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை  விசாரித்த  நீதிபதிகள், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐக்கு மாற்றி  உத்தரவிட்டுள்ளனர். இதனை, சி.பி.எம். கட்சி வரவேற்கிறது. இது ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்களுக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றியாகும். உடனடியாக, சி.பி.ஐ. தாமதம் செய்யாமல் உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

Sponsored


துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு உத்தரவிட்டவர்கள் உள்ளிட்ட அனைவரது மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும், அவர்களை வழக்கு விசாரணை முடியும் வரையில் பணி நீக்கம் செய்ய வேண்டும் என கட்சி சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.மக்களின் நலன் கருதி தமிழக  அரசு இந்த வழக்கில் இனி மேல் முறையீடு செய்யக் கூடாது. அதேபோல் துாத்துக்குடி காவல் துறையினர், இனிமேலும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் மக்களை துன்புறத்த கூடாது” என்றார்.Trending Articles

Sponsored