திமுக பக்கம் சாய்கிறாரா திவாகரன்?



திமுக தலைவர் கருணாநிதி காலமானதால், அவர் எம்.எல்.ஏ-வாக பதவி வகித்த திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நடத்தி வரும் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிடுவது குறித்து திவாகரனும் அவரது மகன் ஜெயானந்தும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். தி.மு.க-வுக்கு ஆதரவாக மறைமுகமாக செயல்பட திவாகரன் முடிவெடுத்திருப்பதாகவும் ஆனால் இதில் இவரது மகன் ஜெயானந்துக்கு உடன்பாடில்லை எனவும் இவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Sponsored


கடந்த 12-ம் தேதி புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஜெயானந்த் ‘’திருவாரூர் இடைத்தேர்தலில் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிடும். அதில் நானே வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவர் திவாகரன் ‘’திருவாரூர் திமுக தலைவர் கருணாநிதியின்  தொகுதி. அண்ணா காலத்தில் ஒரு கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் இறந்துவிட்டால் அந்த தொகுதியில் தம் கட்சி போட்டியிடுவதை அவர் விரும்பியதில்லை. அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தும் நாங்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாமல் நடுநிலை வகிக்க உள்ளோம். தற்போது இடைத்தேர்தல் வந்தால் திமுக வெற்றி பெறுவதற்கே வாய்ப்புள்ளது. இந்த இடைத்தேர்தல் ஆர்.கே. நகர் போல் இருக்காது.” என தெரிவித்தார்.

Sponsored


தினகரனை வீழ்த்த திமுக-வை மறைமுகமாக ஆதரிக்க திவாகரன் முடிவெடுத்துள்ளதாகவும் ஆனால் இதில் இவரது மகன் ஜெயானந்துக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை என்கிறார்கள் இவர்களது குடும்ப உறவினர்கள். தேர்தலில் நேரடியாக போட்டியிட்டால்தான் மக்களோடு நெருங்க முடியும். படிபடியாக தங்களது கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க முடியும். அடுத்தடுத்த தேர்தல்களில் மற்ற கட்சிகள் கூட்டணிக்கு அழைக்கும். திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக-வை வெற்றிப்பெற வைப்பதால் தங்களுக்கு எந்த பலனும் இல்லை. நேரடியாக தேர்தலில் போட்டியிட்டால்தான், தினகரனின் அமமுக-விற்கு விழும் ஒட்டுகளை கணிசமாக பிரித்து தங்களது செல்வாக்கை நிரூபிக்க முடியும் என ஜெயானந்த் நினைக்கிறார். ஆனால் திவாகரனி கணக்கு வேறுவிதமாக இருக்கிறது. திமுக-விற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதோடு, தங்களது கட்சியினரை களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்ற வைக்கவும் திட்டமிட்டுள்ளார். திருவாரூர் இடைத்தேர்தலில் தினகரனின் அமமுக தோல்வி அடைந்தால் அதன் பிறகு தினகரன் மீதான மாயை தகர்ந்துவிடும். தங்களை அலட்சியம் செய்தால் தினகரனால் இங்கு அரசியல் செய்ய முடியாது என்பதை நிரூபித்துவிட வேண்டும் என்பதில் திவாகரன் உறுதியாக இருக்கிறார். இதுதான் சரியென இவரது ஆதரவாளர்களும் நினைக்கிறார்கள். தேர்தலில் நின்று மிகவும் குறைவான வாக்குகள் வாங்கினால், அதன் பிறகு தினகரனுக்கு எதிராக எது பேசினாலும் மக்களிடம் எடுபடாது என கருதுகிறார்கள்.” என தெரிவித்தார்கள்.   

Sponsored




Trending Articles

Sponsored