141 அடியைத் எட்டியது முல்லைப்பெரியாறு அணை.. விவசாயிகள் மகிழ்ச்சி!Sponsoredமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 141அடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழை காரணமாகக் கேரள பகுதிகள் வெள்ளமெனக் காட்சியளிக்கிறது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து இன்று காலை சரியாக 7.15 மணியளவில் அணையின் நீர்மட்டம் 141அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 155அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையில், 152அடி வரை தண்ணீர் தேக்கலாம். ஆனால், கடந்த 1979ம் ஆண்டில், கேரளா உருவாக்கிய சர்ச்சையைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்டது.

Sponsored


Sponsored


இதனை எதிர்த்து  உச்சநீதிமன்ற சென்ற தமிழக அரசு கடந்த 2014ல், அணையின் நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்திக்கொள்ளலாம், பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு அணையின் முழு கொள்ளளவான 152அடி வரை நீர் தேக்கிக் கொள்ளலாம் என வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது. அதன்படி, 2014, 2015ஆகிய ஆண்டுகளில் தலா ஒரு முறை அணையின் நீர்மட்டம் 142அடியை தொட்டது. அதன் பின்னர் தற்போது தான் 142அடியை அணையின் நீர்மட்டம் அடைய உள்ளது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் காலை 07.15 மணிககு 141 அடியைத் தொட்டது. இன்று மதியத்திற்குள் 142அடியை எட்டிவிடும் என்கின்றனர் அதிகாரிகள். தற்போது அணைக்கு நீர்வரத்து 16,000 கன அடியாகவுள்ளது. வெளியேற்றம் 2,200 கன அடியாகவுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.Trending Articles

Sponsored