கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமிநாட்டின் 72-வது சுதந்திரதின விழாவையொட்டி சென்னைக் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Sponsored


இன்று இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவலர் துறையின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், கோட்டைக் கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

Sponsored


Sponsored


இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டுள்ளனர். மேலும், இந்த விழாவில் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்குப் பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டன.

இன்று கடற்கரை சாலையில் நடைபெறும் சுதந்திரதின விழாவையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யபட்டுள்ளன. சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. சென்னைக் கோட்டை பகுதியில் 5 அடுக்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விழாவுக்கு வரும் முக்கியப் பிரமுகர்களுக்குச் சிறப்பு அடையாள அட்டையும் வழங்கபட்டுள்ளது. Trending Articles

Sponsored