`யாரும் செல்ஃபி எடுக்காதீங்க!'- காவிரி கரையோர மக்களுக்கு அமைச்சர் உதயகுமார் அறிவுரைSponsoredகாவிரிக் கரையோர மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார். 

சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், `காவிரி கரையோர மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. காவிரி நதி நீர் கால்வாய்கள் மற்றும் பிற நீர் நிலைகளில் நீர் வெளியேறும் போது நீச்சல், மீன்பிடித்தல் மற்றும் பிற பொழுதுபோக்கு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sponsored


அணைகளிலிருந்து தண்ணீர் அதிகமாக வெறியேற்றப்படும் போது தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி ஆற்றங்கரையில் குழந்தைகள் குளிக்கவும் மற்றும் விளையாடவும் அனுமதிக்கக் கூடாது எனவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் கட்டிவைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் உயர்மட்ட பாலங்கள் தவிர ஆற்றின் குறுக்கே செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்கு தரைமட்ட பாலங்களிலும் எச்சரிக்கை பதாகைகள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் எந்தவித பீதியும் ஏற்படக் கூடாது என்பதையும், பாதிப்புக்குள்ளாகும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைத்திடவும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் யாரும் செல்ஃபி எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
 
அணைகளின் தற்போதைய நிலவரம்
 
1. மேட்டூர்  உயரம் - 120.25 அடி 
 கொள்ளளவு - 93.87 டி.எம்.சி 

Sponsored


மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வரவு - வினாடிக்கு 1,20,800 கன அடி
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் - வினாடிக்கு 1,20,800 கன அடி.
 
2. பவானிசாகர் உயரம் - 101.98 அடி 
 கொள்ளளவு – 30.3 டி.எம்.சி
அணைக்குத் தண்ணீர் வரவு  - வினாடிக்கு 40,000 கன அடி
அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் - வினாடிக்கு 45,000 கன அடி.

3. அமராவதி உயரம் - 87.8 அடி  
கொள்ளளவு – 3.84 டி.எம்.சி 
அணைக்குத் தண்ணீர் வரவு  - வினாடிக்கு 11,968 கன அடி 

அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் - வினாடிக்கு 11,629 கன அடி.

4. அழியாறு  உயரம் - 118 அடி 

கொள்ளளவு – 3.7 டி.எம்.சி
 அணைக்குத் தண்ணீர் வரவு  - வினாடிக்கு 6,081 கன அடி
அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் - வினாடிக்கு 6,480 கன அடி.

5. பெருஞ்சானி உயரம் - 75.5 அடி 
 கொள்ளளவு – 2.75 டி.எம்.சி
 அணைக்குத் தண்ணீர் வரவு  - வினாடிக்கு 12,265 கன அடி
 அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் - வினாடிக்கு 30,360 கன அடி.

பிலிகுண்டு பகுதியில் இன்று காலை 9.00 மணிக்கு வினாடிக்கு – 1,23,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. பிலிகுண்டுக்கு மேலே உள்ள கொல்லேகால் பகுதியில் இன்று காலை 6.00 மணிக்கு வினாடிக்கு 1,48,000 அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த வெள்ளநீர் பிற்பகல் 4.00 மணிக்கு மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூரிலிருந்து வெளியேற்றப்படும் வெள்ள நீருடன் பவானிசாகர் மற்றும் அமராவதி அணைகளிலிருந்து தற்போது திறக்கப்படும் நீரும் காவரி ஆற்றில் சேரும். எனவே, காவிரி ஆற்றில் மாயனூர் (கட்டளை அணைக்கட்டில்) வரும் வெள்ள நீரின் அளவு வினாடிக்கு 2 லட்சம் கன அடி வரை எட்டலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, காவிரி கரையோரத்தில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

நாமக்கல் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 276 மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 2 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் உயர்மட்ட பாலங்கள் தவிர ஆற்றின் குறுக்கே செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்கு தரைமட்ட பாலங்களிலும் எச்சரிக்கை பதாகைகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வைக்கப்பட்டுள்ளன.
பல்துறை மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிப்பெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். பல்துறை மண்டல குழுக்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறுதேசம் கிராமத்தில் 65 குடும்பங்களும், குன்னத்தூர் கிராமத்தில் 15 குடும்பங்களும், கீரிப்பாறை 23 குடும்பங்களும், ஐய்யக்கோடு கிராமத்தில் 27 குடும்பங்களும், அருவிக்கரை கிராமத்தில் 2 குடும்பங்களும், குமரன் குடி கிராமத்தில் 4 குடும்பங்களும், திருவட்டாறு கிராமத்தில் 11 குடும்பங்களும், குழித்துறை கிராமத்தில் 2 குடும்பங்களும் ஆக மொத்தம் 149 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிக பட்சமாக 85.20 மிமீ, செம்பரம்பாக்கத்தில் 53 மிமீ, மழை பெய்துள்ளது. சராசரியாக 50.36 மிமீ பெய்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே 15.08.2018 மற்றும் 16.08.2018 ஆகிய இரு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்காள விரிகுடாவின் வடக்குப் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.Trending Articles

Sponsored