அரியவகை மரங்களைக் கொண்ட வண்டலூர் மரப் பூங்கா நாளை திறப்பு!Sponsoredசென்னைக்கு அருகே உள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள கொளப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மரப் பூங்கா நாளை மக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படுகிறது.  

``வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அருகே அருகில் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள வன ஆராய்ச்சி பிரிவு மூலமாக வன மரபியல் வளங்களை பாதுகாக்க 8 ஹெக்டேர் பரப்பளவில் மரப் பூங்கா அமைக்கப்படும்“ எனக் கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை விதி எண் 110 ன் கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், அந்த இடத்தில் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்து 300 வகையான மரங்கள் ஒரே இடத்தில் வளர்க்கப்பட்டு மரபியல் வளம் கொண்ட பூங்காவாகச் செயல்படும் எனத் தெரிவித்தார். இதற்காக சுமார் 2 கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. வண்டலூர் மலையிலிருந்து வெளியேறும் மழைநீரைச் சேமித்து மரப் பூங்காவில் உள்ள மரங்களுக்குப் பாசனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பூங்காவைப் பார்வையிட வரும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இங்குள்ள ஒவ்வொரு தாவரத்துக்கும் அதன் தாவரப் பெயர் மற்றும் அறிவியல் பெயர் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மாணிக்கம், மலையாத்தி, நெட்டிலிங்கம், புன்னை உள்ளிட்ட அரிய வகை மரங்கள் இங்கு நடப்பட்டுள்ளன. அரியவகை மரங்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இது பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Sponsored


நாளை நடைபெறும் இந்த விழாவின் அழைப்பிதழில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனின் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து செங்கல்பட்டு எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன், ``அரசு நிகழ்ச்சி என்பதால், அரசியல் மரபுப்படி அந்த தொகுதியில் எம்.எல்.ஏ-வின் பெயர் அழைப்பிதழில் இடம் பெற்றிருக்க வேண்டும். எந்த அரசு விழாவிலும் ஆட்சியாளர்கள் மக்கள் பிரதிநிதிகளை மதிப்பதில்லை. மரியாதை இல்லாத இடத்தில் நமக்கு என்ன வேலை?” என்கிறார்.

Sponsored
Trending Articles

Sponsored