கருணாநிதி நினைவிட விவகாரத்தை அரசியலாக்கவேண்டாம்!- ஓ.பன்னீர்செல்வம்Sponsoredதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிட விவகாரம் முடிந்துவிட்டது. எனவே, அதனை அரசியலாக்கவேண்டாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் 72-வது சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டுவருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னைக் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்றினார். அந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்துகொண்டார். அதன் பின்பு, சென்னைத் திருவான்மியூரிலுள்ள கோயிலில் நடந்த சமபந்தியில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், `மக்கள் தொகையின் அடிப்படையில் வாக்குச்சாவடி மறுசீரமைப்புப் பணி நடைபெற்றுவருகிறது.

Sponsored


அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தாமதமாகிறது. நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெறும். இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பதை அ.தி.மு.க உயர்மட்டக் குழு முடிவு செய்யும். தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவிட விவகாரம் முடிந்துவிட்டது. அதனை அரசியலாக்கவேண்டாம்' என்று தெரிவித்தார். 

Sponsored
Trending Articles

Sponsored