`2021ல் நாங்கள்தான் தேசியக் கொடியை ஏற்றுவோம்'- அமைச்சர் ஜெயக்குமார் ஆரூடம்Sponsored`2021-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தேசியக் கொடியை ஏற்றுவோம்' என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், `தமிழகத்தில் தொடர்ந்து தேசியக் கொடி ஏற்றுவது அ.தி.மு.க அரசுதான்' என்று கூறினார்.

Sponsored


72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருது அ.தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,`அ.தி.மு.க தலைமையிலான ஆட்சியை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது. அடுத்து தமிழகத்தில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என்று தீர்மானிப்பது மக்கள்தான். கட்சிகள் அதைத் தீர்மானிக்க முடியாது. மக்கள் தீர்மானித்திருப்பது அ.தி.மு.க-வின் அரசைத்தான். 2021-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தேசியக் கொடியை ஏற்றுவோம். மக்களின் அங்கீகாரம் பெற்றவர்கள் நாங்கள். 

Sponsored


தமிழகத்தில் அடுத்த ஆட்சி தி.மு.க-தான் என அக்கட்சி கூறுவது ஜனநாயகத்தின் உரிமை. அ.தி.மு.க-வின் அரசு இதோ, ஒரு நாளில் கலைந்துவிடும். இரண்டு மாதத்தில் கலைந்துவிடும் என்று எதிர்க்கட்சியினர் கூறினர். ஆனால், அவர்களில் கனவு பலிக்கவில்லை. அரசியலில் ரஜினிக்கு அனுபவம்போதாது. அவர், அரசியலில் முதிர்ச்சி அடையவில்லை. தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலையும் எதிர்கொள்வோம்' என்று பேசினார். Trending Articles

Sponsored