"முதல்வர் கொடி ஏற்ற முடியாது" - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை காவலாளி கைதுSponsoredசென்னை தலைமைச் செயலகத்தில், சுதந்திர தின நிகழ்ச்சியின்போது குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்த, கோவையைச் சேர்ந்த காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய அந்த நபர், “சென்னை கோட்டையில் சுதந்திர தின நிகழ்ச்சியின்போது குண்டு வெடிக்கும். முதல்வர் எடப்பாடி பழ்னிசாமி, கொடி ஏற்ற முடியாது” என்று மிரட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

Sponsored


இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த நபர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகாராஜா என்ற மாரி ராஜா என்பது தெரியவந்தது. இவர், கோவையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இதைத்தொடர்ந்து, கோவை, ஓசூர் சாலையில் பணியில் இருந்த மாரிராஜை, ரேஸ்கோர்ஸ் போலீஸ் கைது செய்தனர். அவர் மீது, 294 b, 506, 507 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

Sponsored
Trending Articles

Sponsored