கருணாநிதியின் நினைவிடத்தில் தினசரி வைக்கப்படும் `முரசொலி' நாளிதழ்..!Sponsoredமறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், அவர் முதல் குழந்தையாக பாவித்த `முரசொலி' நாளிதழ் தினசரி வைக்கப்பட்டு வருகிறது.

``தவழ்ந்தாடும் - தத்தி நடக்கும் - தணலை மிதிக்கும் - விழும்! எழும்! ஆனாலும் எந்த நிலையிலும் கொண்ட கொள்கையை மண்டியிட வைத்ததில்லை... முன்வைத்த காலை பின்வைக்க நினைத்ததுமில்லை! `முரசொலி' நான் பெற்ற முதல் குழந்தை! ஆம் அந்த முதற்பிள்ளைதான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல கிண்கிணி அணிந்த கால்களுடன் பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்கச் சென்று வா மகனே! செருமுனை நோக்கி! என அனுப்பி வைக்கப்பட்ட அன்புப் பிள்ளை!'' -  என்று `முரசொலி' பற்றிச் சொன்னவர் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி. ஆம், அந்த அளவுக்கு `முரசொலி' நாளிதழை பேணி பாதுகாத்து வந்தார் கருணாநிதி. இந்தநிலையில், காண்போரை நெகிழவைக்கும் சம்பவம் ஒன்றை தி.மு.க தொண்டர்கள் செய்து வருகின்றனர். 

Sponsored


Sponsored


கருணாநிதி, கடந்த 7ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. தி.மு.க தொண்டர்களின் மத்தியில் பேரிழப்பாக அமைந்துள்ளது அவரது இறப்பு. அவரது மறைவையடுத்து தி.மு.க தொண்டர்கள் நாள்தோறும் நெகிழ்ந்து அஞ்சலி செலுத்தும் காட்சிகளை மெரினா கடற்கரையில் பார்க்க முடிகிறது. இதற்கிடையே, கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா நினைவிடத்தில் அவர் முதல் குழந்தையாக பாவித்த `முரசொலி' நாளிதழ் தினசரி வைக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல் மெரினாவில் கடந்த 8-ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. 

அன்றிலிருந்து இன்று வரை நினைவிடத்தில் அவரின் புகைப்படம் அருகே தினமும் `முரசொலி' நாளிதழ் வைக்கப்பட்டு வருகிறது. நினைவிடத்தில் தினமும் விதவிதமாக அலங்காரங்களுக்கு மத்தியில், முரசொலியை வைக்கும் பணிகளை நினைவிடத்தில் உள்ள தி.மு.க தொண்டர்கள் செய்து வருகின்றனர். முன்னதாக, கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள சந்தனப்பேழையிலும் முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டதது. அத்துடன் அண்ணா அணிவித்த அன்புப் பரிசான மோதிரம் மற்றும் பேனா ஆகியவையும் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டது. Trending Articles

Sponsored