மூன்றாவது முறையாக ஏகாம்பரநாதர் கோயிலில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு!Sponsoredகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் மூன்றாவது முறையாக இன்று கோயிலில் உள்ள சோமாஸ் கந்தர் சிலைகளை ஆய்வு செய்தனர். ஐந்து மணி நேரத்திற்கு நடந்த இந்த ஆய்வில் இந்து அறநிலையத்துறையை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு செய்யப்பட்ட புதிய உற்சவர் சிலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதியான முத்தையா உட்பட 9 பேர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 2ம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி ரகுபதி தலைமையில் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆய்வு செய்தனர். அப்போது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பி.எம்.ஐ (positive metal Identification) என்ற எலக்ட்ரானிக் கருவி மூலம் சோமாஸ் கந்தர் சிலை மற்றும் ஏலவார் குழலி ஆகிய சிலைகளை பரிசோதனை செய்தனர். பரிசோதனையின் முடிவில் அந்தச் சிலைகளில் எள்ளளவுகூட தங்கம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜனவரி 21ம் தேதியும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் தொல்லியல் துறையினருடன் சேர்ந்து ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சென்று ஆய்வு நடத்தினர். சிலை செய்ததில் நடந்துள்ள முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக ஜூலை 31ம் தேதி இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கியது. 

Sponsored


Sponsored


இந்த நிலையில் இன்று முன்றாவது முறையாகச் சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. இன்று காலை 11 மணிக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி பழனிசெல்வம் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் கோயில் உள்ளே நுழைந்ததும் கதவுகள் சாத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து கோயிலில் உள்ள சர்ச்சைக்குரிய சோமாஸ்கந்தர் உற்சவர் சிலைகளை அளவெடுத்தனர். அதைத் தொடர்ந்து சிலைகளின் எடைகளும் கணக்கிடப்பட்டது. அறநிலையத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் அர்ச்சகர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஐந்து மணிநேரமாக நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு பிறகே அதிகாரிகள் வெளியே வந்தனர். Trending Articles

Sponsored