சிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி!Sponsoredசெங்கல்பட்டில் பிரியாணி கடை ஒன்றில் சாப்பிட சென்றவர்கள் ஆர்டர் செய்த சிக்கனில் புழுக்கள் நெளிந்த சம்பவத்தை நேற்று விகடனில் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். இதைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் தொலைக்காட்சி நிருபர்களாக பணியாற்றும் சுதாகர், ஆறுமுகம், விஜய் ஆகியோர் நேற்று மாலை செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள பிரியாணி கடை ஒன்றிற்கு சென்றனர். அவர்கள் சிக்கன் பிரியாணி, தந்தூரி சிக்கன் உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்குச் பிரியாணி மற்றும் சிக்கன் தந்தூரியை கொண்டுவந்து வைத்தார் சர்வர். அதில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. இதையடுத்து அவர்கள் அங்கேயே வாந்தி எடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் உணவக உரிமையாளரிடம் முறையிட்டனர். ஆனால், அவர்கள் அலட்சியமாக அவர்களுக்கு பதில் கூறிவிட்டார்கள். இந்தத் தகவலை மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணனிடம் தெரிவித்தோம்.

Sponsored


Sponsored


உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். இதைத் தொடர்ந்து இன்று அந்த உணவகத்திற்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தனர். சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை கைப்பற்றி அவற்றை அழித்தனர். மேலும், உணவுப் பாதுகாப்புத்துறை சார்பாக அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணனிடம் பேசினோம். “விகடனில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து அந்த உணவகத்திற்கு இன்று உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளை அனுப்பி சோதனை செய்தோம். அந்த உணவகத்திற்கு உணவுப் பாதுகாப்புத்துறையிடம் இருந்து உரிமம் பெறப்பட்டிருக்கிறது. இதையடுத்து உணவுப் பாதுகாப்பு சட்டம் பிரிவு 55-ன்படி சரிசெய்ய வேண்டிய குறைகளை குறிப்புகளாக அவருக்குக் கொடுத்துள்ளோம். மேலும், நான்கு நாள்கள் அவருக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நான்கு நாள்களில் நாங்கள் குறிப்பிட்டுச் சொன்ன குறைகளைச் சரிசெய்யாவிட்டால், அவர் மீது வழக்கு பதிவு செய்வோம். 3 கிலோ சிக்கன், மசாலா உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி அழித்துவிட்டோம். எப்படி உணவகத்தைப் பராமரிக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டிகளை எப்படி வைத்திருக்க வேண்டும் என அவருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்” என்கிறார்.Trending Articles

Sponsored