ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்!Sponsoredசுதந்திர தினத்தையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பெரும்பாலானோர் புறக்கணித்துள்ளனர். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரிஹித் இன்று ராஜ்பவனில் கொடியேற்றிவைத்தார். ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் மாலையில் அரசியல் கட்சியினர், நீதிபதிகள், அதிகாரிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அவ்வழக்கத்தின் படி, இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பங்கேற்க பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதிகாரிகள், அரசியல்வாதிகள் என விஐபிக்கள் பலர் கலந்துகொண்ட இந்த விருந்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை. நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகள் பெரும்பாலானவை காலியாக இருந்தன. 

Sponsored


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜிக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக விஜயா தஹில் ரமணி கடந்த 12ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் நீதிபதிகளுக்கு உரிய இடம் ஒதுக்கப்படவில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் அதிருப்தி தெரிவித்தார். இதுகுறித்து கூறிய நீதிபதி ரமேஷ், `ராஜ் பவனில் நடந்தது ஒரு கசப்பான அனுபவம். இது ஒரு ஏமாற்றம் மட்டுமல்ல, அரசியல் கட்சியினருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடம் ஒதுக்கிய ராஜ்பவன் அதிகாரிகள் நீதிபதிகளுக்கு இடம் ஒதுக்காமல் அவமதித்துள்ளனர்" எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்தே ஆளுநரின் இன்றைய தேநீர் விருந்தையும் நீதிபதிகள் புறக்கணித்துள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored