`உயர்கல்வி ஆணையச் சட்டம் இந்த நோக்கத்துக்காகத்தான் பயன்படும்!’ - மத்திய அரசைச் சாடும் கல்வியாளர்கள்Sponsoredகார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே உயர்கல்வி ஆணையச் சட்டம் கொண்டு வரப்படுவதாக பா.ஜ.க மீது தமிழ்த் தேசிய பேரியக்கம் குற்றம்சாட்டியிருக்கிறது.

மாநில அரசுகளின் அதிகாரத்தையும், பல்கலைக் கழகங்களின் நிர்வாக உரிமையை பறிப்பதற்காகவும் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு உயர்கல்வி ஆணையத்தைத் திணிப்பதாக தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகவே உயர்கல்வி ஆணையச் சட்டம் கொண்டு வரப்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Sponsored


இதுகுறித்து நம்மிடம் பேசிய கி.வெங்கட்ராமன்,``தமிழ்நாட்டு கல்வியாளர்கள், மாணவர்கள், மக்கள் இயக்கங்கள் ஆகியவற்றின் முனைப்பான எதிர்ப்பால் மோடி அரசு தான் முன்வைத்த “புதிய கல்விக் கொள்கை” ஆவணத்தை வலியுறுத்தாமல் நிறுத்தி வைத்தது. வந்த ஆபத்து நீங்கியதாக பலரும் நிம்மதி பெரு மூச்சுவிட்ட நிலையில், இக்கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் வைத்தும், மாநிலங்களுக்கு அனுப்பியும் ஒப்புதல் பெறாமலேயே, அதன் வெவ்வேறு கூறுகளை செயல்படுத்தத் தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக இப்போது நடப்பில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவைக் (UGC) கலைத்துவிட்டு அதற்கு பதிலாக “உயர்கல்வி ஆணையத்தை கொண்டு வர முயல்கிறது.

Sponsored


இதற்காக “இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம், 2018 (பல்கலைக் கழக நல்கைக் குழுச் சட்டம் - 1956 நீக்கம்) (Higher Education Commission of India Act - 2018, Repeal of University Grants Commission Act -1956) என்ற பெயரில் புதிய சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. ஆனால், இச்சட்டத்தின் கூறுகளைக் கூர்ந்து கவனித்தால் இந்திய அரசின் மிகக் கடுமையான சர்வாதிகாரப் பிடி உயர்கல்வித் துறையில் இறுகுவதற்கே இது கொண்டுவரப்படுகிறது என்பது புரியும். நடப்பில் உள்ள பல்கலைக் கழக மானியக் குழு, இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், உயர் கல்விக் கழகங்கள் ஆகியவற்றின் கல்வித் தரத்தை மதிப்பிட்டு, புதிய படிப்புகள், கல்வித் திட்டங்கள் ஆகியவற்றிற்கு வழிகாட்டுதல் வழங்குவதோடு, உயர்கல்வி நிறுவனங்களுக்கான நிதி நல்கைகளை முடிவு செய்யும் அதிகாரம் கொண்டது.

ஆனால், முன்மொழியப்பட்டுள்ள உயர்கல்வி ஆணையம் நிதி வழங்குவது குறித்து எந்த முடிவும் மேற்கொள்ள முடியாது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை மட்டுமே செய்யலாம். அமைச்சரகம்தான் பல்கலைக்கழகங்களுக்கும், உயர் கல்வி நிறுவனங்களுக்கும் நிதி வழங்குவது குறித்து முடிவு செய்யும். யு.ஜி.சி. பெருமளவு தன்னாட்சி அதிகாரம் கொண்டது. அதேநேரம், தற்போது முன்மொழியப்பட்டுள்ள உயர் கல்வி ஆணையம் முற்றிலும் இந்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. கூடுதல் தன்னாட்சி வழங்குவது என்று சொல்லிக் கொண்டே தனது அதிகாரப்பிடியை இந்திய அரசு இறுக்கியுள்ளது.

உயர்கல்வி ஆணையம் என்பது முழுக்க முழுக்க இந்திய அரசின் கைப்பொம்மையாக மாற்றப்படுகிறது. இந்த ஆணையத்தின் தர மதிப்பீட்டை பெற்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கே நிதி வழங்குவதற்கு பரிந்துரை செய்யவேண்டும் என்று ஆணையத்தின் பணிகளை வரையறுக்கும் விதி 15 வலியுறுத்துகிறது. இதன்மூலமும் பெருங்குழும கல்வி நிறுவனங்களுக்கு அரசின் நிதி நல்கைக் கிடைக்க வழி ஏற்படுத்தப்படுகிறது. இன்னும் தொடங்கப்படாத அம்பானியின் ஜியோ உயர்கல்வி நிறுவனத்திற்கு “உயர் தகுதி நிறுவனம்” (Institute of Excellence) என்ற தகு நிலை அளித்து 1,000 கோடி ரூபாய் நிதி வழங்க முன்வந்த அரசுதான் மோடி அரசு என்பதைக் கவனத்தில் கொண்டால் உயர்கல்வி ஆணையச் சட்டம் எந்த நோக்கத்திற்காக பயன்படும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்” என தெரிவித்தார்.  Trending Articles

Sponsored