ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம் விமர்சையாக நடந்ததுSponsoredராமேஸ்வரம் திருக்கோயிலில் ராமநாதசுவாமி - பருவதவர்த்தினி அம்மன் திருக்கல்யாணம் விமர்சையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம் செய்தனர்.


ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் இன்று இரவு விமர்சையாக நடந்தது. திருக்கோயில் தெற்கு வாசல் திருக்கல்யாண மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க சுக்லபட்ச பஞ்சமி திதியும், அஸ்த நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய தினமான இன்று இரவு கும்பலக்கனத்தில் உலக நன்மைக்காக அருள்மிகு ராமநாதசுவாமி-ஶ்ரீபருவதவர்த்தினி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

Sponsored


 
இந்த விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி - அம்பாள் திருக்கல்யாணத்தை தொடர்ந்து சிறப்பு தரிசனம் செய்தனர். முன்னதாக செவ்வாய்கிழமை ராமதீர்த்தம் தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்று வைபவமும், அதனை தொடர்ந்து நள்ளிரவு பூப்பல்லக்கில் பருவதவர்த்தினி அம்மன் தபசு மண்டகப்படியில் இருந்து திருக்கோயிலுக்கு எழுந்தருளிய நிகழ்வும் நடைபெற்றது. 

Sponsored


சுவாமி - அம்பாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மஞ்சள் மற்றும் திருமாங்கல்ய கயிறு ஆகியன பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அன்னதானமும் நடைபெற்றது. திருக்கல்யாண விழாவில் திருக்கோயில் தக்கார் இளையமன்னர் குமரன் சேதுபதி, திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, டி.எஸ்.பி மகேஷ் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.Trending Articles

Sponsored