மிகப் பெரிய ’பீன் சாலட்’ - மதுரையில் ஆசிய அளவிலான சாதனை! தமிழ்நாடு சம்பேர் ஃபவுண்டேஷன் நடத்திய "வைப்ரன்ட் தமிழ்நாடு 2018 - Global Expo & Food Summit (Food Edition)" நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு,  செஃப் எம்.எஸ்.ராஜ்மோகன் தலைமையிலான 25-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் இணைந்து "Largest Bean Salad" என்ற உலக சாதனை முயற்சியைச் செய்தனர். 

Sponsored


இந்த உலக சாதனை முயற்சி, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் கின்னஸ் உலக சாதனைக்காக செய்யப்பட்டது. இதைப் பார்வையிடுவதற்காக ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இருந்து மதிப்பீட்டாளர் விவேக் ராஜா மற்றும் FSSAI சார்பாக சோமு சுந்தரம்  கலந்துகொண்டு, 'பீன் சாலட்'டின் உணவு சுகாதாரம் மற்றும் தரத்தை ஆய்வுசெய்தனர். கொள்ளு, சுண்டல், மொச்சை, தட்டை, பச்சைப்பயறு,பட்டாணி, நிலக்கடலை போன்ற வெவ்வேறு வகையான 9 பயிர் வகைகளைக் கொண்டும், அதனுடன் பலவகையான காய்கறிகளைச் சேர்த்தும், 1121.6 கிலோவில் இந்த சாலட் தயாரிக்கப்பட்டது. இதற்காக பிரத்யேக பாத்திரம் மற்றும்  கரண்டிகள்  தயாரிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


மிகப் பெரிய அளவில் செய்த இந்த 'பீன் சாலட்', NGO அமைப்பான 'பலகரங்கள்' மூலமாக காப்பகங்களுக்கும் ஆசிரமங்களுக்கும் வழங்கப்பட்டது. தமிழ்ப் பாரம்பர்ய முறையில் தயாரித்த  இந்த 'பீன் சாலட்' முயற்சி, மக்களிடத்தில் பயிர் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதற்கான முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லும் நோக்கத்தோடு செய்யப்பட்டது. உலகிலேயே முதல் முறையாகச் செய்யப்பட்ட இந்தச் சாதனை முயற்சிக்கு, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஆசிய அளவிலான சாதனைக்கான சான்றிதழ்களையும் பதக்கத்தையும் கொடுத்து கௌரவித்தது.

Sponsored
Trending Articles

Sponsored