திருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை



Sponsored



ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆறு, காவிரி ஆற்றின் கிளை ஆறாக விளங்குகிறது. காவிரியில் தண்ணீர் வந்தால், பெரும்பாலான கன அடி தண்ணீர் கொள்ளிடத்தில்  திறந்துவிடப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கன மழையால், காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், திருச்சியில் காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் கரைகளைத் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Sponsored


பல இடங்களில் காவிரிக் கரையோர கிராமங்களில், வாழைத்தோட்டங்கள், வெங்காய விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது.  இப்படியான சூழலில்,  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே  உள்ள நெம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், குறிப்பாக சுமார் கடந்த 90 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேம்பாலம், கொள்ளிடத்தில்  அதிகமாகத் தண்ணீர் வருவதால், பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, தகவலறிந்து வந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அந்த மேம்பாலத்தில் போக்குவரத்துக்குத் தடைசெய்துள்ளனர்.

Sponsored


இந்தப் பாலத்தின் அருகே  காவிரி, கொள்ளிடத்தில் தண்ணீர் வராத காலங்களில், சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால், மண் அரிப்பு ஏற்பட்டு, தற்போது பாலம் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பாலம்  இடிந்து விழும்நிலையில் உள்ளது என்று கூறப்படுகிறது. பிரதானமாக விளங்கும் இந்தப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள செய்தி, திருச்சியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.



Trending Articles

Sponsored