அதிகரிக்கும் நீர்வரத்து!- 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்!



Sponsored



உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2014-ம் ஆண்டில், 142 அடியைத் தேக்கிக்கொள்ளலாம் என உத்தரவிட்டது. அதன் பின்னர், இரண்டு முறை 142 அடியை அடைந்திருக்கிறது முல்லைப்பெரியாறு அணை. அதற்கு அடுத்ததாக, நேற்று 142 அடியை எட்டியதும் விவசாயிகள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, அணையின் ஷட்டர்கள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது. அதேபோல, தமிழகப் பகுதி வழியாகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர் மழை காரணமாக அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவந்ததன் காரணமாக, 142 அடியில் இருந்து 139 அடியாக அணையின் நீர் மட்டத்தைக் குறைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதினார். இச்சம்பவம், முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நேற்றைய நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து 16 ஆயிரத்து 629 கன அடியாக இருந்தது. 2 ஆயிரத்து 200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

Sponsored


Sponsored


இரவு முழுவதும் தொடர்ந்த மழையால், இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து 25 ஆயிரத்து 733 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேபோல, 2 ஆயிரத்து 336 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அணையின் நீர்மட்டம் தற்போது 142.20 கன அடியாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணையில் இருந்து அதிக தண்ணீர் வெளியேற்றப்படுவதால், கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



Trending Articles

Sponsored