`கருணாநிதியால் கிடைத்த அங்கீகாரம் இது!' - கண்ணீர் அஞ்சலி செலுத்திய பெண் காவலர்கள்



Sponsored



தமிழக காவல்துறைக்கு 1973-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில்தான் பெண் காவலர்கள் முதன் முறையாகத் தேர்வு செய்யப்பட்டனர். அந்த சமயத்தில் காவலர்களாகப் பதவியேற்ற சிலர், இன்று கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.


 

தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியின்போது 1973-ம் ஆண்டு முதன்முதலில் பெண் ஆய்வாளராக வசந்தி என்பவர் பதவியேற்றார். அவருடன் ஒரு பெண் தலைமைக் காவலர் உள்பட 20 பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அதன்பிறகு 1992-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின்போது சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் முழுவதும் பெண்களைக் கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது.  ` தி.மு.க ஆட்சியில்தான் பெண்கள் காவல்துறையில் சேர்க்கப்பட்டனர்.  அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையைப் பிறப்பித்தது தி.மு.க-தான்’ என்று கருணாநிதி பெருமிதத்துடன் கூறுவது வழக்கம்.

Sponsored


 
 

Sponsored


இந்நிலையில் 1973-ம் ஆண்டு காவலர்களாக பதவியேற்ற பெண்கள் இன்று மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். 



Trending Articles

Sponsored