காய்கறிகள், அரிசி, கம்பளி உட்பட 12 பொருள்கள்! ஊட்டியிலிருந்து கேரளா சென்ற நிவாரணம்Sponsoredகேரள மாநிலம் முழுவதும் பெய்துவரும் வரலாறு காணாத வகையில் மழையால், பாெதுமக்கள் வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்து, நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நிவாரண பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கேரள மாநிலம் வயநாடு மாவட்ட நிர்வாகத்துக்கு, நீலகிரி மாவட்டத் தாேட்டக்கலைத்துறை, சமூக நலப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் நிவாரண பாெருள்கள் பெறப்பட்டு, லாரிகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

இதன்படி விவசாயச் சங்கங்களிடமிருந்து காய்கறி வகைகள், அரிசி, பருப்பு உள்ளிட்டவையும் சமூக நலத்துறை சார்பில் வேட்டி, சேலை, துண்டு உள்ளிட்ட பாெருள்களும், நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி சார்பில் 1 லட்சம் மதிப்பிலான பிஸ்கெட், சோப்பு, அரிசியும் சமூக நலப்பணி துறை சார்பில் துணி, சானிட்டரி நாப்கின், பேபி வேர்ஸ், சோப், சாம்பு உள்ளிட்ட 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களும், தோட்டக்கலைத் துறை சார்பில் 3 டன் காய்கறி, 800 கிலோ அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரையும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நன்கொடையாக ரூ. 25000 பணம் அளித்துள்ளனர். மொத்தமாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 4 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வயநாடு கலெக்டரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. மேலும் ஊட்டியில் இருந்து 3 மருத்துவ குழுவினர் மருந்துப்பொருள்களுடன் வயநாடு சென்றுள்ளனர். வயநாடு மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டதன்படி 10 டன் அரிசி அனுப்பப்படவுள்ளது.

நகராட்சி வணிக வளாகத்தில் செயல்படும் கடைகள் உதவியுடன் பேஸ்ட், பிரஷ், கம்பளி, பிஸ்கெட் உள்ளிட்ட தின்பண்டங்கள், சானிட்டரி நாப்கின் பாேன்ற அத்தியாவசியப் பாெருள்கள் இன்று மதியம் அனுப்பப்பட்டன. நீலகிரி மாவட்ட நிர்வாகம் மழையால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டத்துக்கு நிவாரண பொருள்கள் அனுப்ப உள்ளதை அறிந்த, பல தன்னார்வ தாெண்டு நிறுவனங்களும் நிவாரணப் பாெருள்களை வழங்கி வருகின்றன. குறிப்பாக, மாவட்ட நிர்வாகம் அனுப்பும் நிவாரண பொருள்கள் இல்லாது, இன்று மாலை உதகமண்டலம் நகராட்சி அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் இரண்டு லாரிகளில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட உள்ளன.  
  

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored