`முல்லைப் பெரியாறு பாதுகாப்பாக உள்ளது' - கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்Sponsoredமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், 142 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் கேரள முதல்வருக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். 

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்குத் தண்ணீர் இருப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். எனவே, நீர்மட்டத்தை 139 அடியிலேயே பராமரிக்க வேண்டும் என்று கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று கோரிக்கை விடுத்திருந்தார். 

Sponsored


முன்னதாக, கேரள தலைமைச் செயலகத்தில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அவசரக் கூட்டம் நேற்று கூடியது. இதில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீரை தமிழகம் வெளியேற்ற வேண்டும். ஆனால், குறைந்த அளவே வெளியேற்றி வருகிறது. இதனால், பாதிப்பு ஏற்படும் எனக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். அதில், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்குத் தண்ணீர் இருப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். எனவே, நீர்மட்டத்தை 139 அடியிலேயே பராமரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தலையிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Sponsored


இந்தநிலையில், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் நீர்மட்டத்தைக் குறைக்கத் தேவையில்லை எனவும் முதல்வர் எடப்பட்டி பழனிசாமி, கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், `முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க உச்ச நீதிமன்றம் அமைத்த குழு கடந்த 4.8.2018-ல் அணையை ஆய்வு செய்தது. அப்போது, அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிவைக்கலாம். இதனால் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்தனர். அதனால், அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கினால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது' என்று தெரிவித்துள்ளார்.Trending Articles

Sponsored