காவல்துறையினர் மன உளைச்சல்! - டி.ஜி.பி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுSponsoredகாவலர்களின் மன உளைச்சலைக் குறைக்க, காவலர் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிய மனுவை ஆறு வார காலத்துக்குள் பரிசீலிக்க தமிழக டி.ஜி.பி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரவுப் பணியில் உள்ள காவலர்களுக்குக் கட்டாய ஓய்வு நேரம் வழங்க உத்தரவிட வேண்டும், யோகா பயிற்சி அளிக்க வேண்டும், காவலர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்பட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், `தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தற்போது அதிக அளவில் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் காவலர்களின் தற்கொலை முயற்சி அதிகரித்து வருவதாகவும்' மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை ஆறு வார காலத்துக்குள் மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored