நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் தரப்பு கடிதம் - தூத்துக்குடி ஆட்சியர் தகவல்!Sponsored``நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல ஆலைத்தரப்பு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளது. அந்தக் கடிதம் குறித்து ஆலைத் தரப்பினரிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளது'' என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் தமிழக அரசின் கருவூலகம் மற்றும் கணக்குத்துறை சார்பில் அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்த திறனூட்டல் மாநாடு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில்  நடந்தது. இதில், கருவூலகம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலாளர் தென்காசி ஜவகர் மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா உட்பட 1500 அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Sponsored


இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ``நெல்லை மாவட்ட அணைகளிலிருந்து திறந்து விடப்பட்டு  தூத்துக்குடி வந்துள்ள 15 ஆயிரம் கன அடி தண்ணீர், ஸ்ரீவைகுண்டம் அணையின் மேலக்கால், கீழக்கால், வடகால் மற்றும் தென்கால் ஆகிய 4 முக்கிய கால்வாய்கள் வழியாக மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Sponsored


துாத்துக்குடி மாவட்டத்துக்கு தற்போது  வெள்ள அபாயம் இல்லை என்றாலும் அனைத்துத் துறை அதிகாரிகளும் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஆலையைத் திறக்க அனுமதி கேட்டு, ஆலை நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

அக்கடிதம் குறித்து ஸ்டெர்லைட்  ஆலையிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளது. அந்த விளக்கங்கள் கிடைக்கப் பெற்றதும், அக் கடிதத்தை தமிழக அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.” என்றார்.Trending Articles

Sponsored