முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்!Sponsoredமுன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நாளை டெல்லி செல்கின்றனர்.

பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும் சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, தலைமை மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வாஜ்பாயின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று இரவு எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனால், பா.ஜ.க வட்டாரம் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்துவந்த வாஜ்பாய், சிகிச்சைப் பலனின்றி மாலை 5:05 மணிக்கு உயிரிழந்தார்.

Sponsored


Sponsored


அவரது உடல் நாளை டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இந்நிலையில் வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்கின்றனர். அதே போல தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி உள்ளிட்டோரும் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லி செல்கின்றனர்.Trending Articles

Sponsored