`திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு!’ - சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அருகில் செல்லத் தடைகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் அருகில் செல்லவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Sponsored


கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் மழை காரணமாக 9 வீடுகள் முழுமையாகச் சேதம் அடைந்தன. 56 வீடுகள் பாதி அளவு சேதம் அடைந்துள்ளன. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர். ரப்பர் பால் எடுக்கும் தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. பல ஹெக்டேர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் தண்ணீர் அதிகமாக வெளியேற்றப்படுவதால் அனைத்துக் கால்வாய்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Sponsored


Sponsored


குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் அருவிக்கு அருகில் செல்லவே சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை. வெள்ளப்பெருக்கு காரணமாகக் கடந்த 8 நாள்களாகத் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், அருவிக்கு அருகில் சென்று பார்ப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. Trending Articles

Sponsored