`எங்களுக்கு அங்கீகாரம் அளியுங்கள்' - கலெக்டரிடம் வேதனைப்பட்ட இருளர் இன மக்கள்``இருளர் இன மக்களை முன்னேற்றுவதற்காக நாங்கள் தினம்தோறும் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்களது குழுக்களை அங்கீகரிக்கச் சொல்லி மனு கொடுத்தால் அதிகாரிகள் தட்டிக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் முன்னேறுவது உங்களுக்குப் பிடிக்கவில்லை" என்று காட்டத்தோடு இருளர் வன உரிமைக்குழு அரியலூர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Sponsored


மனு அளித்தவர்களிடம் பேசினோம். ``அரியலூர் மாவட்டத்தில் குவாகம் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் பழங்குடியினரைச் சேர்ந்த 60 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களது ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கொங்கணர் வனத்தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் நாங்கள் தேன் எடுப்பது, கிழங்கு தோண்டுதல், எலி பிடித்தல், விறகு எடுத்தல், ஆடு, மாடு மேய்த்தல் உள்ளிட்ட தொழில்களைச் செய்து வருகிறோம். இதில் கிடைக்கும் வருமானம்தான் எங்களது வாழ்வாதாரம். அதேபோல் 2017-ம் ஆண்டு குவாகம் இருளர் வன உரிமைக்குழு தொடங்கப்பட்டு, தொடர்ந்து எங்களது மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறோம். எங்கள் பகுதியில், கோயில்கள், பள்ளிக்கூடம், குடிநீர்த் தொட்டி என எங்கள் பகுதி மக்களுக்காக அதிகாரிகளிடம் கேட்டு பெற்றுக்கொண்டிருக்கிறோம். அதேபோல் எங்களது முயற்சியால் எங்களது சமுதாயமே மேம்பட்டு அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. எனவே எங்களது குழுவுக்கு அங்கீகாரம் அளிக்குமாறு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற குடியரசுத் தின கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றுமாறு மனு அளித்தோம்.

Sponsored


ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். அங்கீகாரம் அளிக்காததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. மனுக்கள் கொடுத்துவிட்டோம். இந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கமறுக்கிறார்கள். இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாகப் போராட்டத்தை நடத்துவதைத் தவிர எங்களுக்கு வழி இல்லை" என்று எச்சரித்தனர்.

Sponsored
Trending Articles

Sponsored