விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட அமைச்சர் - உரிய சிகிச்சை தர அறிவுறுத்தல்!Sponsoredசென்னை ஆலந்தூரில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய இளைஞரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டார்.

சென்னையில் நாள்தோறும் கவனக்குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இருசக்கர வாகன விபத்துகள் நடந்து வருகின்றன. சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றுகொண்டிருந்தபோது, ஆலந்தூர் ரயில்நிலையம் அருகே, இருசக்கர வாகன விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் தத்தளித்துக்கொண்டிருந்ததைக் கண்டார். இதையடுத்து, காரை நிறுத்தி கீழே இறங்கி இளைஞரை மீட்ட அவர், படுகாயமடைந்த இளைஞருக்கு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளித்தார்.  இதையடுத்து அந்த ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் சிக்கிய இளைஞர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தார். மேலும், அரசு மருத்துமனையைத் தொடர்புகொண்டு மருத்துவ உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்து, உரிய சிகிச்சை அளிக்க அவர் அறிவுறுத்தினார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored