ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை!



நாம் வெளியூர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்கிறோம். அப்படி முன்பதிவு செய்து, எதிர்பாராதவிதமாகப் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டால், டிக்கெட்டை ரத்து செய்ய நினைக்கிறோம். அப்படி ரத்துசெய்தால் டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், டிக்கெட்டை எப்போது கேன்சல் செய்தால் டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்கும் என்ற குழப்பம் நிலவுகிறது. இந்தக் குழப்பங்களுக்கு விடையளிக்கும் விதமாக, ரயில் டிக்கெட் கேன்சல் செய்வதற்கான விதிமுறைகளை
வெளியிட்டுள்ளது ஐ.ஆர்.டி.சி. அடிக்கடி ரயிலில் பயணிப்பவர்கள் இந்த விதிமுறைகளைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

தட்கல் டிக்கெட்...

Sponsored


உறுதி செய்யப்பட்ட தட்கல் டிக்கெட் எடுத்திருந்து அதை கேன்சல் செய்தால், பணம் எதுவும் திரும்பக் கிடைக்காது. அதே சமயம், அந்தத் தட்கல் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டிலிருந்து, ரத்து செய்யப்பட்டால், டிக்கெட் கட்டணத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு மீதமுள்ள தொகை திருப்பி அளிக்கப்படும்.

Sponsored


முன்பதிவு டிக்கெட்...

Sponsored


ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பு முன்பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்யாவிட்டால் அல்லது டிக்கெட் டெபாசிட் ரசீது (Ticket Deposit Receipt) ஃபைல் செய்யாவிட்டால் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கான பணம் திரும்பக் கிடைக்காது.

ஆர்.ஏ.சி இ டிக்கெட்...

ஆர்.ஏ.சி இ டிக்கெட் இருந்தால், ரயில் புறப்படுவதற்கு முன்பு 30 நிமிடங்களுக்கு முன்பு அந்த டிக்கெட்டை ரத்துசெய்யாவிட்டால், டிக்கெட்டுக்கு உரிய பணம் திரும்பக் கிடைக்காது.

வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள ஐ டிக்கெட்...

ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஐ டிக்கெட் முன்பதிவு மையத்தில் டிக்கெட்டை கேன்சல் செய்யவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், டிக்கெட்டு்க்கான தொகை திரும்பக் கிடைக்காது. இது ஆர்.ஏ.சி மற்றும் சாதாரண வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும்.

ரயில் மூன்று மணி நேரம் தாமதம்; பயணி ரயிலைத் தவற விடும் போது...

இதுபோன்ற சமயத்தில், ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு டிக்கெட்டை கேன்சல் செய்யாவிட்டால் டிக்கெட் கட்டணம் திரும்பக் கிடைக்காது. இது ஆர்.ஏ.சி மற்றும் வெயிட்டிங் லிஸ்ட்டுக்கும் பொருந்தும்.

பிரிமீயம் சிறப்பு ரயிலில் டிக்கெட் கேன்சல்...

ஐ.ஆர்.டி.சி விதிமுறையின் படி பிரிமீயம் சிறப்பு ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்ட அல்லது ஆர்.ஏ.சி டிக்கெட்டுகளை ரத்துசெய்ய இயலாது. அந்தச் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டால்தான் டிக்கெட்டை கேன்சல் செய்யமுடியும்.

முழுவதும் உறுதிசெய்யப்படாத இ டிக்கெட்டுகள்...

ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு டிக்கெட் கேன்சல் செய்யாவிட்டால் அல்லது டி.டி.ஆர் ஃபைல் செய்யாவிட்டால், டிக்கெட் கட்டணம் திரும்பக் கிடைக்காது. இது வெயிட்டிங் லிஸ்ட், ஆர்.ஏ.சி டிக்கெட்களுக்கும் பொருந்தும்.

ஐ டிக்கெட் தொலைந்து விட்டால்...

ஐ டிக்கெட் தொலைந்து விட்டால் டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாது. அதே சமயம், ரயில்வே நிர்வாகம் டூப்ளிகெட் டிக்கெட் வழங்கும்.

சார்ட் தயார் செய்த பின்பும் டிக்கெட் ஆர்.ஏ.சி யில் இருந்தால்...

ஆர்.ஏ.சி டிக்கெட் இருந்து, அதை ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு கேன்சல் செய்யாவிட்டால், டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்காது.

பார்த்து எச்சரிக்கையாக பிளான் செய்யுங்கள் மக்களே!



Trending Articles

Sponsored