ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு!Sponsoredமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி பா.ஜ.க-வினர் சாலை மறியல் மற்றும் அரசுப் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்ததால் ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. அந்தப் பகுதிகளில் 70 சதவிகிதம் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில், குடியாத்தத்திலிருந்து ஆம்பூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்துமீது பா.ஜ.க-வினர், கல்லை எரிந்து கண்ணாடியை உடைத்துள்ளனர். இதனால் அந்தப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். அதையடுத்து, பேருந்து ஓட்டுநர் சின்னத்தம்பி அளித்த புகாரின் பேரில், ஆம்பூர் நகர பா.ஜ.க தலைவர் அண்ணாதுரை, துணைத் தலைவர் சுரேந்தர், கமல் ஆகிய 3 பேரை கைது செய்தது போலீஸ். அவர்களை விடுவிக்க கோரி பா.ஜ.க வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு மேலும் பதற்றம் நிலவி வருகிறது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored