மைனர் பெண்ணைத் திருமணம் செய்த ராணுவ வீரர் கைது!Sponsoredமைனர் பெண்ணைத் திருமணம் செய்த ராணுவ வீரர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21). இவர், ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் காதலுக்கு பெண் வீட்டுத் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Sponsored


இதையடுத்து, விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர் சதீஷ், கடந்த 11-ம் தேதி மாணவியை அழைத்துச் சென்று அரியூரில் உள்ள கோயிலில் வைத்து ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். இந்தநிலையில் நேற்று இருவரும் பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீஸாரிடம் மனு அளித்தனர்.

Sponsored


இதற்கிடையே ராணுவ வீரர் சதீஷ்குமார் காதலித்த கல்லூரி மாணவியைக் காணவில்லை என அவருடைய பெற்றோர் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். அதன்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணையில், அந்த மாணவி மைனர் பெண் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மைனர் பெண்ணைக் கடத்திச் சென்றதாக ராணுவ வீரர் சதீஷ்குமாரை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கெம்மங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண்குமார் (வயது 24) என்ற மற்றொரு ராணுவ வீரரையும் போலீஸார் கைது செய்தனர். மாணவியை மீட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.Trending Articles

Sponsored