தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்! - தொல்லியல் துறையினர் அதிர்ச்சிSponsoredதஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தின் பின்புறமிருந்த சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவதால், தொல்லியல் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேபோன்று சில ஆண்டுகளுக்கு முன்பும் சந்தனமரங்கள் வெட்டி கடத்தபட்டன. இப்போதும் அதேபோல் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் பெரிய கோயிலின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளதாகப் பக்தர்கள் ஆதங்கத்தோடு தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப் பிரசித்திபெற்றது. தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தினம்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.  
கோயில் வளாகத்தின் பின்புறத்தில் புல்தரைகள், அழகுச் செடிகள், பூங்காக்கள் உள்ளன. இந்தப் பகுதி கடந்த சில ஆண்டுகள் வரை பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டிருந்தது. இதனால், பல்வேறு பிரச்னை ஏற்படுவதாகக் கூறி அந்தப் பகுதியைப் பார்ப்பதற்கு தற்போது பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், கடந்த 10 ஆண்டுக்கு முன்பு தொல்லியியல் துறையினர் அந்தப் பகுதியில் மூன்று சந்தன மரக்கன்றுகளை நட்டு, அதற்கு இரும்பு வேலி அமைத்து பாதுகாத்து வந்தனர். தற்போது சுமார் 10 சந்தன மரங்கள் அந்தப் பகுதியில் வளர்ந்து செழிப்பாக இருக்கின்றது.

Sponsored


Sponsoredஇந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் கோயிலின் பின்புறமிருந்த 3 சந்தன மரங்களில் உள்ள கிளைகள் வெட்டி அந்த இடத்திலேயே போட்டு விட்டு மரங்களை மட்டும் அடியோடு வெட்டி எடுத்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த இந்திய தொல்லியியல் துறையினர் தஞ்சை மேற்குக் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில், போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்து கோயில் அலுவலர்களிடம் பேசினோம்.`கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று சந்தன மரக்கன்றுகளை நட்டோம். பின்னர் அந்த மரம் வளர்ந்து அதிலுள்ள சந்தன பழத்தைப் பறவைகள் சாப்பிட்டு, எச்சங்களிட்டதால், தற்போது 10 மரங்கள் வரை வளர்ந்து உள்ளது. இந்நிலையில் இன்று தோட்டத்தில் வேலை செய்பவர்கள் சென்று பார்த்தபோது மூன்று மரங்களின் கிளைகள் வெட்டி அங்கேயே போட்டுவிட்டு மரத்தை மட்டும் மர்ம நபர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அப்போதும் போலீஸில் புகாரளித்தோம். இதுவரை கண்டுபிடிக்கவில்லை’ என்றனர். பாதுகாப்பாக இருக்கும் பெரிய கோயிலின் பின்புறம் முள்வேலி அமைத்து பாதுகாத்து வந்த சந்தன மரத்தைக் கடத்தி இருப்பது குறிப்பிடதக்கது. இதனால் பெரிய கோயிலின் பதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது எனப் பக்தர்கள் பலர் ஆதங்கத்தோடு தெரிவித்தனர்.Trending Articles

Sponsored